India

விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

Dinakaran - 0 sec fa

விழுப்புரம்: விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு லஞ்ச புகார்களின் அடிப்படையில் 6 பேர் கொண்ட குழு சோதனை நடத்துகின்றனர்.

Categorie: India

தூதரக அதிகாரிகளின் கார்கள் விற்பனைக்கு வருவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்: அமெரிக்கத் தூதரகம்

Dinakaran - 0 sec fa

சென்னை: சென்னையில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் வாகனங்கள் விற்பனைக்கு வருவதாக வரும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. இணையவழி விளம்பரம் மூலமாக அமெரிக்கத் துணைத் தூதரகம் வாகனங்களை விற்பனை செய்வதில்லை என அறிவித்துள்ளது.

Categorie: India

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Dinakaran - 0 sec fa

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்பட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதவராவ், சீனிவாசராவ் உள்பட 6 பேரையும் டிச.26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Categorie: India

ஜெ.ஜெயலலிதா என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

Dinakaran - 0 sec fa

சென்னை: ஜெ.ஜெயலலிதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய மறுத்தது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறிய பி.ஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெயலலிதா கட்சி என்றோ ஜெ.ஜெ கட்சி என்றோ பதிவு செய்ய முடியாது என்ற விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு எதிர்த்து தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஜோசப் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு 4 வாரம் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categorie: India

புதுவையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இருதயம் சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் கொண்டுவரப்பட்டது..

Dinakaran - 0 sec fa

சென்னை: புதுவையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இருதயம் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு வந்துள்ளது. புதுவையில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் இருதயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் இருதயத்தை கொண்டுவர போக்குவரத்தை சரி செய்து போலீசார் சிறப்பு ஏற்பாடு செய்து தந்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் மலர் மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவர்கள் இதயத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

Categorie: India

காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

Dinakaran - 0 sec fa

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் என்ற இதடத்தில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

Categorie: India

திருப்பூரில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தர லஞ்சம் வாங்கியதாக மின்பொறியாளர் மீது புகார்

Dinakaran - 0 sec fa

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு பகுதியில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தர இளநிலை மின்பொறியாளர் ரூ.2000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பொறியாளர் கண்ணியப்பனிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categorie: India

சென்னை சேத்துப்பட்டில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு போலீஸ் வலைவீச்சு

Dinakaran - 0 sec fa

சென்னை : சென்னை சேத்துப்பட்டில் பட்டப்பகலில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி ரேகாவை கணவர் டேவிட் கொலை செய்துள்ளார்.

Categorie: India

மேகதாது அணை திட்டத்தை தமிழகம் புரிந்துகொள்ளவில்லை: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

Dinakaran - 0 sec fa

பெங்களூரு: தமிழகம் மேகதாது அணை திட்டத்தை புரிந்துகொள்ளவில்லை, அரசியலுக்காக திட்டத்தை எதிர்ப்பது சரியல்ல என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். மேகதாது அணை திட்டத்தை சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படுத்த உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Categorie: India

ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் மனு

Dinakaran - 0 sec fa

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் டெல்லியில் மனு அளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுவிட்டதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தல் முறைகேடு வழக்குகளை திரும்பப் பெற்றதால் உரிய நடவடிக்கை எடுக்க திமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categorie: India

ஜெ. மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

Dinakaran - 0 sec fa

சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Categorie: India

நாளை அரசுத்துறை வங்கிகளின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம்

Dinakaran - 0 sec fa

சென்னை: நாளை அரசுத்துறை வங்கிகளின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை வங்கிகளின் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து தனியார் துறை வங்கி அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categorie: India

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி செயல்பாட்டை பாதுகாப்பேன்: கவர்னர் சக்தி காந்த தாஸ் பேட்டி

Dinakaran - 0 sec fa

மும்பை: ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி செயல்பாட்டை பாதுகாப்பேன் என்று புதிய கவர்னர் சக்தி காந்த தாஸ் உறுதியளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்ற அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து ரிசர்வ் வங்கி கூட்டம் 14ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

Categorie: India

கோவையில் ரயில் மோதி 6 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது குழந்தை உயிரிழப்பு

Dinakaran - 0 sec fa

கோவை: கோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரயில் மோதி 6 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Categorie: India

முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

Dinakaran - 0 sec fa

போபால்: மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ஏ.கே.அந்தோனி முன்னிலையில் கூட்டம் நடைபெறுகிறது. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூடியுள்ளனர்.

Categorie: India

திரைப்பட போஸ்டரில் காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

Dinakaran - 0 sec fa

வேலூர்: மகா திரைப்பட போஸ்டரில் காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகாவுக்கு எதிராக வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categorie: India

இயக்குனர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

Dinakaran - 0 sec fa

சென்னை: இயக்குனர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக அரசின் கொள்கையை விமர்சித்ததாக முருகதாஸ் மீது தேவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் முருகதாஸ் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனை அவரச வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது.

Categorie: India

தன் மீது அன்பு காட்டிய மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு நன்றி: சிவ்ராஜ் சிங் சவுகான்

Dinakaran - 0 sec fa

போபால்: தன் மீது அன்பு காட்டிய மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு நன்றி என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன்னால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்றதாக தெரிவித்துள்ளார். தான் முதலமைச்சராக பதவியேற்றபோது மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தனது ஆட்சியில் செயல்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categorie: India

மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை: பாஜக தலைவர் கருத்து

Dinakaran - 0 sec fa

போபால்: மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. போபாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ராகேஷ், சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் பாஜகவுக்கே அதிக வாக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Categorie: India

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை: எம்எல்ஏ ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு

Dinakaran - 0 sec fa

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், கன்னியாகுமரியில் கஞ்சா புழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Categorie: India